முல்லைத்தீவில் மாயமான 13 வயது பாடசாலை மாணவி மீட்பு; ஒருவர் கைது..!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரிபத்துக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரிய வருகையில்,

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரத்தில் வசிக்கும் 13 வயதுடைய சிறுமியை காணவில்லை என சிறுமியின் தாயார் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் சனிக்கிழமை (18) முறைப்பாடு செய்துள்ளார்.தாயாரின் முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், செவ்வாய்க்கிழமை (21) முல்லைத்தீவு – தீர்த்தக்கரை பகுதியில் வைத்து சிறுமியையும் இளைஞனையும் கைது செய்துள்ளனர்.பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் , மருத்துவ பரிசோதனைகளில் சிறுமி பாலியல் துஷ்பியோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.இதனையடுத்து, இளைஞனை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது டிசம்பர் 5ஆம் திகதிவரை இளைஞனை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்