நினைவேந்தல் உரிமையில் ரணில் இரட்டைவேடம் – அங்கஜன்

நினைவேந்தல் உரிமையில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இரட்டைவேடம் போடுவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(24) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், மேற்கண்டவாறு சாடியுள்ளார்.இலங்கையிலுள்ள மக்களுக்கு நினைவேந்தலுக்கான உரிமை உள்ளதாக அவர் கூறுகின்ற போதிலும் அவருக்கு கீழ் உள்ள பாதுகாப்பு தரப்பினரே நினைவுகூரலுக்கான உரிமைகளை மறுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அங்கஜன் இராமநாதன் சுட்டிக் காட்டியுள்ளார்.நினைவேந்தலுக்கான தடை கோரும் சிறிலங்கா காவல்துறையினரின் விண்ணப்பங்களை நீதிமன்றங்கள் நிராகரிப்பதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்தோடு, யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞரின் உயிரிழப்பு தொடர்பாக தேசிய மட்ட விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.