வவுனியா உட்பட வடகிழக்கின் பல பகுதிகளில் போலி நிதி நிறுவனங்கள்..!

வடகிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் போலி நிதி நிறுவனங்கள் பல அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அப்பாவி மக்களை இணைத்து, பல மில்லியன்களை காணியில் முதலிடுதல், மரத்தில் முதலிடுதல்,
இலையில் முதலிடுதல், வேரில் முதலிடுதல், எல்லையற்ற இலாபங்களை வழங்குதல் என ஆசை வார்த்தை காட்டி மோசடியில் ஈடுபடுகின்றனர்.இதற்காக உங்களுடன் நன்கு அறிமுகமானவர்களின் நம்பிக்கை மிகு வார்த்தை ஜாலங்களின் மூலம் முதலீடு என்ற பெயரில் மில்லியன் ரூபாய்கள் அறவிடப்படுகின்றன.

சட்டவிரோதமான பணக் கொடுக்ல் வாங்கல் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.இத்தகைய செயல்களை மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களில் மேற்கொள்வதே மிகவும் பாதுகாப்பான முதலீடாக அமையும்.தவறின் உங்கள் பணத்திற்கு பாதுகாப்பற்ற நிலையே உருவாகும் என்பதுடன் கம்பனிச் சட்டத்தில் பதிவு செய்யப்படும் நிறுவனங்கள் என்பதால் மத்திய வங்கியின் நிதிப் பாதுகாப்பு உத்தரவாதம் ஏதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.