யாழில் கணவருடன் வாய்த்தர்க்கம்; தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட மனைவி உயிரிழப்பு..!

அண்மையில் கணவன் மனைவிக்கு இடையே வாய்த்தர்க்கம் முற்றிய போது, தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட மனைவி நேற்று (16) உயிரிழந்துள்ளார். கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த கஜேந்திரன் தர்சினி (வயது 41) என்ற பெண்ணே உயிரிழந்தவர் ஆவார்.கடந்த 7ஆம் திகதி கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் மனைவி தன உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயை பற்றவைத்துள்ளார்.தீக்காயத்துக்குள்ளான நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இச்சம்பவத்துக்கான மரண விசாரணையை யாழ். போதனா வைத்திய சாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.