கட்சியின் அமைப்பாளர் பதவியை துறந்த பசில் நாட்டைவிட்டு வெளியேற்றம்..!

பொதுஜன பெரமுன அமைப்பின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ திடீரென அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி பசில் ராஜபக்ஷ துபாய் வழியாக அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.அண்மையில் நடைபெற்ற பொதுஜன பெரமுன மாநாட்டில் பசில் ராஜபக்ஷ தேசிய அமைப்பாளர் பதவியை விட்டு விலக தீர்மானித்ததையடுத்து அந்த பதவியை வெற்றிடமாக வைக்க கட்சி தீர்மானித்திருந்தது.அதேசமயம் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் சுமார் ஒன்றரை மாதங்கள் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.