குறைவடையவுள்ள மின்சார கட்டணம்; அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்..!

குறைவடையவுள்ள மின்சார கட்டணம்; அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்..!

எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சார கட்டணம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறி்ப்பிட்டுள்ளார்.இதன்படி, மின் கட்டண திருத்தத்தின் போது அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சார சபை அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாலும், நீர்மின் நிலையங்கள் அதிகபட்ச கொள்ளளவில் இயங்குவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.