புலம்பெயர்ந்தோர் தீவிரவாதிகளாக கருதப்படமாட்டார்கள் – சாகல ரத்நாயக்க

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தோர் தீவிரவாதிகளாக கருதப்படமாட்டார்கள் என அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும், பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த தரப்பினர் இலங்கைக்கு எதிரானவர்களாக கருதப்பட மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.புலம்பெயர்ந்தோர் நாட்டின் அபிவிருத்திச் செயற்பாட்டில் அதிக பங்கு வகிப்பதாக அதிபர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சர்வதேச புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில் கலந்து உரையாற்றிய அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர்ந்தோர் மூலம் இலங்கை பல நன்மைகள் பெற்றுக் கொள்ள முடியுமென்பதோடு முதலீடுகளையும் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் சாகல ரத்நாயக்க கூறியுள்ளார்.இந்த முதலீடுகளுக்கு ஏற்ற கவர்ச்சிகரமான இடமாக இலங்கை மாற்றப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், வெளிப்படைத்தன்மை இந்த நடவடிக்கையின் அடிப்படையான அம்சமாக இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.