கடமை நேரத்தில் ஐஸ் பயன்படுத்திய கான்ஸ்டபிளுக்கு பணித்தடை..!

புத்தளம் பல்லம காவல் நிலையத்தில் கடமை நேரத்தில் ஐஸ் ரக போதைப்பொருளை பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பல்லம காவல்நிலையத்தில் கடமையாற்றி வந்த குறித்த கான்ஸ்டபிளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டமையினால் கடந்த ஜீலை மாதம் 17ஆம் திகதி அவரை பரிசோனைகள் காவல்துறையினர் வைத்திய சாலைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் போது, குறித்த கான்ஸ்டபிள் ஜஸ் ரக போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளமை மருத்துவ பரிசோதனைகளில் உறிப்படுத்தப்பட்டுள்ளன.குறித்த மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின் படி, சந்தேக நபரான கான்ஸ்டபிள் புத்தளம் வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் பணிப்புரைகளின் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.