அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு – ஜனாதிபதி உறுதி

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் இருந்து இம்மாதம் முதல் 5 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது.

இதன்படி, செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களும் செலுத்தப்பட்டு விட்டதாகவும், அடுத்த நான்கு காலாண்டுகளில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அத்துடன், இந்த வருட இறுதிக்குள் பொருளாதார வளர்ச்சி 3 வீதமாக அதிகரிக்கப்படும் எனவும், 2025 ஆம் ஆண்டில் 5 வீதமாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.