12 வயதான சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; 61வயதான நபர் உட்பட மூவர் கைது..!

கொழும்பு – மீகொடை பகுதியில் 12 வயதுடைய சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமியின் செயற்பாட்டில் மாற்றத்தை அவதானித்த அவர் கல்வி பயிலும் பாடசாலையின் ஆசிரியை இது தொடர்பாக வினவியுள்ளார்.இதன் போது தாம் இவ்வாறானதொரு சம்பவத்தை எதிர்நோக்கியதாக சிறுமி பாடசாலை ஆசிரியையிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த ஆசிரியர் இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.அதன்படி, 61 வயதுடைய சந்தேகநபர் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.