ரோகித் மீது செம கடுப்பில் இஷான் கிஷன் – மும்பை இந்தியன்ஸில் அடுத்த போர்க்களம்.!

பிசிசிஐ சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளதால் கப்டன் ரோகித் சர்மா மீது செம கடுப்பில் இருக்கிறார். இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருப்பதால் அங்கு அடுத்த போர்க்களம் காத்திருக்கிறது.

இந்திய அணியின் அடுத்த நட்சத்திரமாக பார்க்கப்பட்ட இஷான் கிஷனுக்கு இப்போது நேரம் சரியில்லை. கப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் மீது தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அத்தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் இஷான். அப்போதிலிருந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பிரச்சனை தொடங்கியது.



இந்திய அணிக்காக விளையாடாத பிளேயர்கள் உடனடியாக ரஞ்சி கோப்பைகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியதை இஷான் கிஷன் கண்டு கொள்ளவே இல்லை. மாறாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட தொடங்கினார்.

பயிற்சியாளர் டிராவிட் மற்றும் இந்திய அணியின் தேர்வுக்குழு சொல்லியும் கேட்காத இஷான் கிஷனின் விடயம் நேரடியாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிடம் எடுத்துச் செல்லப்பட்டது.



அவரும் தேசிய அணிக்காக கிரிக்கெட் விளையாடாத பிளேயர்கள் தாங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் மாநில அணிகளுக்கான ரஞ்சி போட்டியில் விளையாட வேண்டும் என அறிவுறுத்தினார். பங்குபெறாத வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.



இஷான் கிஷனை மனதில் வைத்துக் கொண்டு தான் அவரும் இந்த எச்சரிக்கையை விடுத்தார். ஆனால், ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் மீது இருந்த அதிருப்தியால் ஜெய்ஷாவின் உத்தரவுக்கும் அவர் செவிசாய்க்கவில்லை.