வெடுக்குநாறிமலையில் பொலிசாரால் கைதான 08 பேரும் விடுதலை..!

வவுனியாவெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளை, ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை நெடுங்கேணி பொலிஸார் கைது செய்து வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , எட்டு பேரும் இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை வரை விளக்கமறியலில் வைக்கபட்டனர்.இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதவான் வழக்கினையும் தள்ளுபடி செய்தார்.