14 வயது சிறுமி இரு வருடமாக துஷ்ப்பிரயோகம்; இளைஞன் கைது..!

பாடசாலை மாணவியை ஏமாற்றி இரண்டு வருடங்களுக்கு மேலாக பாரிய பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

14 வயதுடைய மாணவியின் தாயார் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தனது தாய் மற்றும் வயதான தாத்தாவுடன் வீட்டில் வசித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதன்படி அந்த நோய்க்கான மருந்தை உட்கொண்டு இரவு உறங்கச் சென்ற நிலையில், வீட்டுக்கு அருகில் வசிக்கும் குறித்த சந்தேக நபர் சிறுமியை ஏமாற்றி இரவு படுக்கைக்கு அழைத்து வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவளை இவ்வாறு துன்புறுத்தியுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.குறித்த சந்தேகநபர் 25 வயதுடையவர் எனவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

பாதிக்கபட்ட குறித்த சிறுமி வைத்தியசாலையில் மெலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.