நெடுங்கேணி ம.வியில் நடைபெற்ற மாகாண தமிழ் சிங்கள புத்தாண்டு விழா..!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா நெடுங்கேணி மகா வித்தியாலய மைதானத்தில் இன்றைய தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது.இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், வலய, கோட்ட அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அரச திணைக்களங்கள அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.