மொட்டுவில் இருந்து கட்சி தாவிய 200க்கு மேற்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு வேட்டு..!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏனைய அரசியல் கட்சிகள் அல்லது கூட்டணிகளின் கீழ் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த சுமார் 200 உறுப்பினர்களை நீக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானித்துள்ளது.

கடந்த தேர்தலில் பொதுஜன பெரமுன ஊடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட சில பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் தற்போது எதிர்வரும் தேர்தலில் ஏனைய அரசியல் கூட்டணிகளின் கீழ் போட்டியிட தயாராகி வருவதாக பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.



எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஏனைய அரசியல் கூட்டணிகளின் கீழ் போட்டியிடத் தீர்மானித்த சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் கிட்டத்தட்ட 200 உறுப்பினர்களுக்கு கடிதங்கள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த கட்சி உறுப்பினர்களை நீக்கி புதிய உறுப்பினர்களை நியமிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.



சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.