அவர் கூட எல்லாம் நீ நடிக்க கூடாது; ஜோதிகாவுக்கு கடிவாளம் போட்ட சூர்யா..!

தென்னிந்திய சினிமாவில் காதலித்து திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வரும் நடிகர்களான ஜோதிகா மற்றும் சூர்யா உள்ளிட்ட இருவருமே தங்களுக்கான தனி ரசிகர்களை கொண்டுள்ளவர்கள். நடிகை ஜோதிகா சூர்யாவுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த நிலையில், திருமணத்திற்கு பின்பு ரீ என்ட்ரி கொடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் ஜோதிகா, சூர்யா இணைந்து 2டி என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனம் மூலம் சூர்யா, ஜோதிகா இருவரும் பல படங்களை தயாரித்து, வெற்றி ஜோடிகளாக வலம் வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் பேசுவது, அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதும் ரசிகர்கள் முதல் திரைத் துறையினர் வரை ஆச்சரியப்பட வைக்க கூடியதாக உள்ளது.இந்நிலையில் சூர்யா, ஜோதிகாவை காதலிக்க ஆரம்பத்திலிருந்தே ஜோதிகா யாருடன் நடிக்க வேண்டும், நடிக்க கூடாது உள்ளிட்டவற்றை யோசித்து ஜோதிகாவுக்கு அப்போதே பல அட்வைஸுகளை வழங்குவார் சூர்யா. ஜோதிகாவும், சூர்யாவை மணமுடித்துக் கொண்டு வாழ வேண்டும் என்ற ஆசையில் அவர் சொல்லும் அட்வைஸ்களை கேட்டு தான் படங்களில் நடிக்க கமிட்டாவார்.

அந்த வகையில் பிரபல மூன்றெழுத்து நடிகருடன் நடிக்க கமிட்டான ஜோதிகாவை, அந்த நடிகருடன் நடிக்க விடாமல் சூர்யா தடுத்துள்ளார். 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் தேதி சூர்யா,ஜோதிகாவுக்கு கோலாகலமாக திருமணமானது. அந்த சமயத்தில் ஜோதிகாவின் கையில் கிட்டத்தட்ட 5 திரைப்படங்களில் நடிக்க கமிட்டானாராம். ஆனால் அத்தனை திரைப்படத்தையும் ஜோதிகா வேண்டாமென உதறி தள்ளிவிட்டார்.அதில் ஒரு திரைப்படம் தான் யாரடி நீ மோகினி, இப்படத்தில் தனுஷ், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஒரு தலை காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம், தனுஷ் மற்றும் நயன்தாராவின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. இதனிடையே , நயன்தாராவுக்கு பதிலாக ஜோதிகா தான் இப்படத்தில் நடிக்க முதன்முதலில் கமிட்டானாராம்.

ஆனால் சூர்யாவை திருமணம் செய்துகொள்ள போகும் சந்தோஷத்தில் இந்த படத்தை வேண்டாம் என உதறித் தள்ளியுள்ளார் ஜோதிகா. ஒருவேளை ஜோதிகா இப்படத்தில் நடித்திருந்தால் கட்டாயம் தேவை இல்லாத பிரச்சனையில் சிக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் தனுஷுடன் இணைந்து நடித்த நடிகைகள் பலர் மார்க்கெட்டில்லாமலும், சர்ச்சைகளில் சிக்கியும் வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யா போட்ட கடிவாளத்தால் ஜோதிகா எஸ்கேப் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.