Sunday, August 23, 2026
Huisதாயகம்புதிய நெருக்கடிகளை உருவாக்கும் செயல்களில் தேர்தல் செயற்குழு - எதிர்க்கட்சிகள் அதிருப்தி

புதிய நெருக்கடிகளை உருவாக்கும் செயல்களில் தேர்தல் செயற்குழு – எதிர்க்கட்சிகள் அதிருப்தி

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாயின் இளைஞர் பிரதிநிதித்துவம் குறித்து கருத்துக்களை பெற வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் குழு கூட்டத்தின் போது இளைஞர் பிரதிநிதிகளை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொகுதிகளை மீண்டும் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று குழுவில் அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில்,குழுவின் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் செயற்குழு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி தமது விதப்புரை அறிக்கைளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் குழுவின் காலம் நீட்டிக்கப்படும் சாத்தியம் காணப்படுகிறது.

மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் ஆராயும் விசேட செயற்குழு அதன் தலைவர் விஜித்த ஹேரத் தலைமையில் கூடியது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் குழுவுக்கு பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது பெண் பிரதிநிதித்துவத்தை போன்று இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் கருத்துக்களை கோர வேண்டும் என்று ஆளும் கட்சியின் குழு உறுப்பினர்கள் குழுவில் யோசனை முன் வைத்துள்ளார்கள்.

அதற்கமைய எதிர்வரும் எதிர்வரும் குழு கூட்டத்துக்கு இளைஞர் பிரதிநிதிகளை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விசேட தேவையுடையவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ‘தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமல், புதிய நெருக்கடிகளை உருவாக்கும் வகையில் தான் குழு செயற்படுகிறது’ என அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!