Tuesday, August 25, 2026
Huisஜோதிடம்இன்றைய இராசி பலன் 25.08.2026

இன்றைய இராசி பலன் 25.08.2026

மேஷம்

நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பணியாட்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில்யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

ரிஷபம்

நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர். யாருக்கும் எந்த உறுதிமொழியும் தராதீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.

மிதுனம்

மகனின் படிப்பு, மகளின் திருமணம் என்று அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் நிதானம் தேவை. பங்குதாரர்களின் ஆலோசனை களைக் கேட்டு செயல்படவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

கடகம்

புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் சாதகமான தீர்வு கிட்டும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

சிம்மம்

நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்துக்காக புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரி பாராட்டுவார்.

கன்னி

தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். வியாபாரத்தில் இருந்த அலைச்சல், டென்ஷன் விலகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.

துலாம்

திட்டமிட்ட வேலைகளை போராடி முடிக்க வேண்டி வரும். மகளின் திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இருக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரம் லாபம் கிட்டும்.

விருச்சிகம்

இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவரு வீர்கள். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். அலுவலக ரீதியான பயணத்தால் ஆதாயம் உண்டு. தொழிலில் போட்டிகள் குறையும். பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும்.

தனுசு

தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும். பணவரவால் வீடு, வாகனத்தை மாற்றுவீர். தந்தைவழி சொத்துகள் கிடைக்க வாய்ப்புண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உதவிகரமாக செயல்படுவர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

மகரம்

முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். வீட்டு பெரியவர் களின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவது நல்லது. வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

கும்பம்

குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர். பிள்ளைகளால் பெருமையடைவீர். பூர்வீக சொத்து வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்

வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர். மனைவி வழி உறவினர்களால் செலவு வரும். நண்பர்கள் உதவியுடன் புது வேலை கிட்டும். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!