பெற்ற மகளையே துஷ்பிரயோகம் செய்த தந்தை – நீதிமன்றம் கொடுத்த தண்டனை..!

52 வயதான ஆறு பிள்ளைகளின் தந்தை, தனது 14 வயது சிறுமியான மகளை தாய் வேலைக்குச் சென்ற நிலையில் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் அவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனையும் ரூபா 10,000 அபராதமும் ஒரு இலட்சம் ரூபா நட்டஈடும் செலுத்துமாறு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது 14 வயது சிறுமியான மகளை வயலுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை பார்த்த நபர் குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவியிடம் இதுபற்றி கூறியுள்ளார்.இதன்படி, குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி சம்பவம் குறித்து வீரவில காவல் துறையில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சந்கே நபரை கைது செய்த காவல் துறையினர் ஹம்பாந்தோட்ட மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் நீண்ட விசாரணையின் பின்னர், சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டது. மேற்படி குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.குற்றம் சாட்டப்பட்டவர் அபராதத்தை செலுத்தாவிட்டால், அவருக்கு 01 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட குற்றவாளியின் சிறுமியான மகளுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும், அதனை செலுத்தாவிடின் 01 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.