6 ஆம் தரத்திற்கான பாடசாலை அனுமதி; கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்..!

2023 ஆம் ஆண்டில் 06 ஆம் தரத்திற்கான பாடசாலைகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையத்தின் ஊடாக அழைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.அதன்படி இன்று(20) நண்பகல் 12.00 மணி முதல் 2023 மே 08 நள்ளிரவு 12.00 மணி வரை அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.மேன்முறையீட்டு விண்ணப்பங்களை https://g6application.moe.gov.lk/#/ என்ற இணையத்தளத்தின் ஊடாக முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.