தேசிய மக்கள் சக்தியின் போராட்டம்; பொலிஸாரின் கோரிக்கை நிராகரிப்பு..!

நீர்கொழும்பு – செல்லந்துவ சந்தியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணியை தடுக்குமாறு பொலிஸாரால் முன் வைக்கப்பட்ட கோரிக்கையை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) நிராகரித்துள்ளது.தேசிய மக்கள் சக்தியினால் நாளை பிற்பகல் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்துள்ளதாக கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.போராட்டத்திற்கு பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்தல் வழங்கப்படவில்லை எனவும் அனுமதி பெறப்படவில்லை எனவும் பொலிஸார் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.

எனினும், அந்த கோரிக்கையை நிராகரித்த நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க டி சில்வா, அவ்வாறானதொரு உத்தரவை பிறப்பிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவித்தார்.