மாகாண சபை தேர்தல் சட்டமூல திருத்தத்தை சபையில் சமர்ப்பித்த சுமந்திரன்..!

பழைய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்தக் கூடியவாறான தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனிநபர் பிரேரணையாக சபையில் சமர்ப்பித்தார்.

பிரதி சபாநாயகர் தலைமையில் செவ்வாய்க் கிழமை (25) கூடிய பாராளுமன்ற அமர்வின் போது எம்.ஏ.சுமந்திரன் தனிநபர் பிரேரணையை முன்வைத்தார்.1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்தும் வகையில் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் தனிநபர் சட்டமூலமாக முன்வைக்கப்பட்ட நிலையில் அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இதற்கமைய குறித்த சட்டமூலத்தின் முதல் வாசிப்பு செவ்வாய்க்கிழமை (25) இடம் பெற்றது.மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை சுமந்திரன் சமர்ப்பித்தவுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அந்த சட்ட மூல திருத்தத்தை ஆதரித்து வழிமொழிந்தார்.