வவுனியாவில் உணர்வுடன் நினைவு கூரப்பட்ட தராக்கி சிவராமின் நினைவு தினம்..!

ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நேற்று(28.04) மதியம் இடம்பெற்றது.

வவுனியா ஊடக அமையத்தின் தலைவர் ப.கார்த்தீபன் தலைமையில் அமையத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வில் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் படத்திற்கு மெழுவர்த்தி ஏத்தியும், மலர்தூபியும் அஞ்சலி செலுத்தினர்.இதன்பின் ஊடகவியலாளர் ந.கபிலநாத் மற்றும் வவுனியா ஊடக அமையத்தின் செயலாளர் கி.வசந்தரூபன் ஆகியோரினால் தராக்கி சிவராம் தொடர்பில் நினைவு உரைகளும் இடம்பெற்றன.