வெசாக்கை முன்னிட்டு மூன்று தினங்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு..!

வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மே மாதம் 04, 05, 06 ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளன.

இதனை மீறி செயற்படும் மதுபானசாலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் வரி திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்தார்.இந்நாட்களில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புகளுக்காக 1200 உத்தியோகத்தர்களை கடமைகளில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.குறித்த காலப்பகுதிக்குள் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் உற்பத்தி தொடர்பில் தகவல்கள் கிடைக்குமாயின், அது தொடர்பில் கலால் வரி திணைக்களத்தின் 1913 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.