உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும்அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!

உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளம் கிடைக்காவிடில் உள்ளூராட்சி அமைச்சுக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் அடிப்படை சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்கள் முறையாக சம்பளம் பெறுவதில்லை என தகவல் கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.இச் சம்பளம் வழங்கப்படாமை தொடர்பான முறைப்பாடுகள் உடனடியாக ஆராயப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.