பரீட்சை வினாத்தாளை எரித்த ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை..!

பாரீஸ் தொழிற்கல்வி பாடசாலைக்கு வெளியே 63 வினாத்தாள்களை எரித்த ஆசிரியருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.பிரான்சிலுள்ள உயர்நிலைப் பாடசாலை ஆசிரியர் விக்டர் இம்மோர்டினோ என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாரீஸ் தொழிற்கல்வி பாடசாலைக்கு வெளியே 63 தேர்வுத் தாள்களை தீ வைத்து எரித்துள்ளார். இது தொடர்பாக ஆசிரியர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.இந்நிலையில், ஆசிரியர் விக்டர் இம்மோர்டினோவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1.31 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக பிரெஞ்சு வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் கல்வி வாரியம் தெரிவித்தது.