Tuesday, February 4, 2025
Huisதாயகம்அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி அனுர வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி..!

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி அனுர வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி..!

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு நியாயமான அடிப்படை சம்பள உயர்வை வழங்குவதற்கும், ஓய்வூதியதாரர்களின் சம்பள முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குாமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இன்று (26) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அரச சேவையை மக்களின் உரிமையாகவும், அரச அதிகாரிகளின் பொறுப்பாகவும் மாற்றும் வகையில் அதனை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

தற்போதுள்ள அரச சேவையில் மக்கள் திருப்தி அடையவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் திறமையான சேவைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் அரச சேவையில் சரியான தரவு கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்கு செயலாற்றி வருவதாகவும், தற்போது அரச சேவையில் உள்ள தரவுகளின் அடிப்படையில் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கான இயலுமை இல்லை எனவும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், அரச சேவையில் தற்போது உருவாகியுள்ள சுமார் 30,000 அத்தியாவசிய வெற்றிடங்களை அவசரமாக நிரப்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் அந்த கூட்டத்தில் கலந்துரையாடப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!