ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனவரி 31 யாழ்ப்பாணப் பகுதிக்கு விஜயம் செய்ய இலங்கை விமானப் படைக்கு சொந்தமான மூன்று விமானங்களை பயன்படுத்தியதாக பொய்யான செய்திகள் தற்போது சமூக வலைத் தளங்களில் பரவி வருகின்றன.
எவ்வாறாயினும், இந்த பயணத்திற்கு இலங்கை விமானப்படைக்கு சொந்தமான எந்த விமானமும் பயன்படுத்தப் படவில்லை என்றும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ காரில் பயணித்தார் என்றும், இது தொடர்பாக சமூக வலை தளங்களில் பரவி வரும் தகவல்கள் முழுமையாக பொய்யானது என இலங்கை விமானப் படை தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது. என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Recent Comments