Saturday, August 2, 2025
Huisதாயகம்வவுனியாவில் மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுமி பலி..!

வவுனியாவில் மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுமி பலி..!

மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரழந்துள்ளார். குறித்த சம்பவம் புளியங்குளம், பழையவாடி பகுதியில் நேற்று (07) இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் ஆறு வயதுடைய ந.மதுசாளினி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஆறு வயது சிறுமி கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார்.

தவறுதலாக கீழே விழுந்த போது நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிறுமி சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

வீட்டார் குறித்த சிறுமியை மட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிறுமி வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!