தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (07.02.2025) இடம்பெற்றது.
தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சைகள் கல்விச் சமூகத்தின் மத்தியில் சிறப்பான வரவேற்பை கடந்த காலங்களில் பெற்றிருந்தன எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் செயற்பாடுகள் கடந்த காலங்களில் அதிகாரிகளால் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன என்பது தொடர்பிலும், எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு சீர் செய்யலாம் என்றும் நிர்வாகத்தினரால் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வித் திணைக்களங்களில் கலந்துரையாடல் நடத்துவதற்கு ஒழுங்குகள் செய்வதாக ஆளுநர் இதன் போது பதிலளித்தார்.
இதவேளை குறித்த தொண்டமானாறு வினாப்பத்திரங்கள் ஓரளவு தரமானவையாக உள்ளது என்பதுடன் முன்னாள் வடக்கு மாகாணப் பணிப்பாளர் ஜோன் குயின்ரசால் தனிப்பட்ட நலன் சார்ந்த விடயங்களுக்காக குறித்த பரீட்சைகள் நிறுத்தப்பட்டது என்பதும் குறித்த தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகிகளின் சில கடந்த காலச் செயற்பாடுகள் அதிபர், ஆசிரியர்கள் முகம் சுழிக்கும் வகையில் அமைந்திருந்தன.
அந்த வகையில் வடகிழக்கில் முன்னெடுக்கும் ஜனநாயக போராட்டங்கள், அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு போராட்டங்களின் போது நெகிழ்வுத் தன்மையற்ற நேர சூசிகை. அதிகாரமிக்க உத்தரவுகள், அதிபர், ஆசிரியர்களின் சம்பள போராட்டங்களை குழப்பும் வகையிலான செயற்பாடுகள், வினாப்பத்திரத்தை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கான பிரதிகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும், பரீட்சைக் கட்டணக் குறைப்பு போன்ற சில செயற்பாடுகளில் மாற்றம் கொண்டு வருவதான நிபந்தனையின் கீழ் மீள வழங்குவது தொடர்பில் பரிசீலிகக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Recent Comments