ஈபிடிபியின் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அபிவிருத்திக் குழுத் தலைவருமான கெளரவ குலசிங்கம் திலீபன் இந்தியாவிலிருந்து விரைவில் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
கடந்த வாரம் தமிழகப் பொலிசாரால் கேரளாவில் போலிக் கடவுச் சீட்டுடன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவர் எதிர்வரும் வாரமளவில் இலங்கை அரசிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்படக் கூடும் என அறியக் கிடைத்துள்ளது.
ஏலவே நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பான நீதிமன்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ள நிலையில் பிணையில் விடுதலையான அவர் நீதிமன்ற முன் அனுமதி அல்லது நீதிமன்றுக்கு அறிவிக்காது நாட்டிலிருந்து சட்ட விரோதமாக வெளியேற முயன்றமை பாரிய குற்றமாக காணப்படுகின்றது.
அதேவேளை கடந்த காலத்தில் குறித்த நபரால் பாதிக்கப்பட்டதாக பலர் தமது முறைப்பாடுகளைப் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Recent Comments