யாழ் மாவட்ட செயலாளர் ம.பிரதீபனின் மகன் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் சிக்கிய மாவட்ட செயலாளரின் மகனும் மற்றும் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
யாழ் – பலாலி வீதியில் கந்தர்மட சந்திக்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதன் போது அருகில் உள்ள வீட்டின் முன்னால் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேகா ரக மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.
விபத்தில் வாகனத்தை செலுத்தி சென்ற மாவட்ட செயலாளரின் மகன் ஆதிரன் என்பவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
அத்தோடு, சாரதி இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த ஆதிரனின் நண்பர் ஒருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த நிலையில், அவரது கால்கள் வாகனத்தினுள் சிக்கியமையால் சுமார் ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னரே அவர் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டு வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த வாகனம் மாவட்ட செயலாளரின் தனிப்பட்ட வாகனம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Recent Comments