மட்டக்களப்பு வைத்திய சாலையின் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று யன்னலினூடாக குழந்தையை வீசி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
உயர் தரத்தில் கல்விகற்று வரும் 18 வயதுடைய மாணவி ஒருவர் சம்பவ தினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிறைமாத கற்பிணியான இவர் கற்பிணி தான் என தெரிவிக்காது வைற்றுவலி என மட்டு போதன வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்
இதனை தொடர்ந்து வயிற்றுவலி என தெரிவித்த இவர் மாணவி என்பதால் சரியான முறையில் வைத்தியர் சோதனையிடாது அவரது சலத்தை சோதனையிட்டு வயிற்று வலிக்கான ஊசி மூலமாக வலி நிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது
இதனை தொடர்ந்து அதிகாலை 5 மணியளில் குறித்த நோயாளி மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் குழந்தையை பிரசவித்து யன்னல் வழியாக வீசியுள்ளார்.
குழந்தை யன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் அங்கு சென்ற நிலையில் குழந்தையை பிரசவித்துள்ளார் என அவர்களுக்கு தெரிய வந்ததையடுத்து வீசிய குழந்தையை மீட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன் தாய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த குழந்தையும் தாயும் பாதுகாப்பாக உள்ளதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்திய சாலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Recent Comments