ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழக மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மூன்று மாணவர்களும் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி பயிலும் இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறைத் தீர்க்கச் சென்றபோது, அதே பீடத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் குழு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த மாணவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recent Comments