வவுனியா, செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன சிப்பிக்குளம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் ஒருவர் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (22) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Recent Comments