Sunday, July 6, 2025
Huisதாயகம்கிளீன் சிறிலங்காவில் இந்து மதத்தையும் கிளீன் செய்ய நினைக்கும் வேலைத் திட்டம்..!

கிளீன் சிறிலங்காவில் இந்து மதத்தையும் கிளீன் செய்ய நினைக்கும் வேலைத் திட்டம்..!

அனுராதபுரத்தில் கிளீன் சிறிலங்காவில் இந்து மதத்தை துடைத்தெறிய நினைக்கும் வேலைத்திட்டம் ஹபரணையில் நடந்தேறியுள்ளதாக சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் ஹபரணை பிரதான வீதியால் பயணம் செய்யாதவர்கள் இருக்க மாட்டீர்கள் அப் பிரதேசத்தில் வீதியின் மருங்கில் பழமையான விநாயகர் ஆலயம் ஒன்று உள்ளது.

பயணிகள் அங்கு வழிபாடு செய்து செல்வது வழக்கம். அவ் வழிபாட்டில் ஈடுபடுவதில் நானும் ஒருவன். தற்போது விநாயகர் ஆலத்தின் முன்னால் பேருந்து தரிப்பிடம் அமைக்கப்பட்டு விநாயகர் ஆலயம் முழுமையாக மறைக்கப்பட்டு குறிகிய காலத்தில் அது அகற்றப்படும் நிலையும் உருவாகியுள்ளது.

எமது இந்து கலாசாரத்தின் தொன்மைபீடமாக இலங்கை இருப்பதால்தான் ஈழத்தினை சிவபூமி என திருமூலர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழைத்திருந்தார்.

எமது மரபுரிமைகளை கடந்த சிங்கள அரசாங்கங்கள் அழித்தது போல தற்போதும் நடைபெறுவது ஏற்க முடியாது.

இதற்கான கண்டனத்தினை நாம் ஒன்றிணைந்து வெளிப்படுத்த வேண்டும். அத்தோடு விநாயகர் ஆலயத்தினை இந்த அரசாங்கம் புனர்நிர்மானம் செய்ய வேண்டும் எனவும் இப்பதிவி்ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!