வடக்கின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரின் தொடர் முறைகேடுகள் தொடர்பில் பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு முன்வைத்த முறைப்பாட்டை சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப விசாரணை செய்யுமாறு வட மாகாண பிரதமர் செயலாளருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த ஆண் வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்பில் இரத்மலானை சம்பவம் உட்பட பல்வேறு முறை பாடுகள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட நிலையிலும் முன்னாள் ஊழல், மோசடிகளுடன் தொடர்புபட்ட பணிப்பாளர் உட்பட அதிகாரிகளுடனான நல்லுறவு காரணமாக மாகாண கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்படாமல் தட்டிக் கழிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற நிலையில், வடக்கு மாகாண கல்வியில் உள்ள முறைகேடுகள், மோசடிகள், அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பில் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குறித்த விடயத்தை பொதுச் சேவை ஆணைக்குழு கல்விச் சேவை ஆணைக் குழுவிற்கு பாரப்படுத்திய நிலையில், இம்முறைப்பாட்டை ஆராய்ந்த கல்விச் சேவை ஆணைக்குழு வலுவில் உள்ள சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக மாகாண பிரதம செயலாளருக்கு பாரப்படுத்தி உள்ளனர்.
கடந்த ரணில் ராஜபக்க்ஷ அரசால் நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் குறித்த விடயத்தில் தொடர்புபட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பாரா? அல்லது காப்பாற்ற முனைவாரா? என்பதே மக்கள் முன்னுள்ள பாரிய வினா.
Recent Comments