Sunday, August 10, 2025
Huisதாயகம்இஷாரா செவ்வந்தி படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றாரா…?

இஷாரா செவ்வந்தி படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றாரா…?

புதுக்கடை நீதிமன்ற அறையில் கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்ய திட்டமிட்டதன் பின்னணியில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும் தடுக்கப்பட்டிருந்தாலும், அவர் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கான சாத்தியக் கூறுகளைக் கருத்தில் கொண்டு, இலங்கை காவல்துறை அவரைப் பற்றிய அனைத்து தகவல்களையும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் வசிக்கும் தேடப்படும் குற்றவாளிகளைக் கைது செய்து நாடு கடத்துவதற்கு இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது, மேலும் இது போன்ற நபர்களை இதற்கு முன்பு இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.

இருப்பினும், அவர் தற்போது இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளாரா என்பது உறுதிப் படுத்தப்படவில்லை, மேலும் அவரைக் கண்டுபிடிக்க மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பல்வேறு குற்றச்சாட்டுக்கள், முறைப்பாடுகள் உட்பட நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்று இந்தியாவில் பிடிபட்ட முன்னாள் வன்னி மாவட்ட ஈபிடிபியின் எம்பி திலீபன் அவர்களை மீள அழைத்துவர அரசு ஆர்வம் காட்டவில்லையா என பலரும் குற்றம் சுமத்துகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!