முல்லைத்தீவிலுள்ள பாடசாலையொன்றின் மாணவி ஒருவரும், ஆசிரியரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நேற்றைய தினம் (04.03.2025) இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
குறித்த பாடசாலைக்கு நேற்றைய தினம் அதே பகுதியில் வசிக்கும் மாணவி ஒருவர் வீட்டில் இருந்து தண்ணீர் கொண்டு சென்றுள்ளார். அதனை சக மூன்று மாணவிகள் அருந்தியுள்ளதுடன் தண்ணீரை குடித்த மாணவிகள் வாந்தி எடுத்துள்ளனர்.
அதனையடுத்து குறித்த விடயம் ஆசிரியர் ஒருவருக்கு தெரியப்படுத்தப் பட்டதனையடுத்து குறித்த மாணவி தண்ணீர் போத்தலை சோதனை செய்து பார்த்த போது போதைபொருள் வாசனை வீசியுள்ளது.
அதனையடுத்து குறித்த மாணவியை ஆசிரியர் தாக்கியுள்ளார். இதனால் குறித்த மாணவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி வீட்டுக்கு சென்று தந்தையிடம் முறையிட்டதனை தொடர்ந்து பாடசாலைக்கு விரைந்த தந்தை குறித்த ஆசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான ஆசிரியரும் நேற்றைய தினம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.


Recent Comments