Wednesday, October 22, 2025
Huisதாயகம்தயாராகிறது பட்டியல்; பல முக்கிய புள்ளிகளின் விபரங்கள் விரைவில் - அரசு

தயாராகிறது பட்டியல்; பல முக்கிய புள்ளிகளின் விபரங்கள் விரைவில் – அரசு

முன்னாள் அமைச்சர்கள் அல்லது ஆட்சியாளர்களின் ஊழல்கள் தொடர்பான பட்டியல்களை வெளியிடுவதை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை. ஏற்கனவே வெளியிடப்பட்டதைப் போன்று பிறிதொரு முக்கிய பட்டியலொன்றும் தற்போது தயாராகிக் கொண்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் அமைச்சர்கள் அல்லது ஆட்சியாளர்களின் ஊழல்கள் தொடர்பான பட்டியல்களை வெளியிடுவதை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை. அந்தந்த நிறுவனங்கள் அதற்கான பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன.

இதுவரை வெளியிடப்பட்ட பட்டியல்களில் இடம்பிடித்தவர்களே அவை தொடர்பில் கலவரமடைந்துள்ளனர். இன்னும் பல பட்டியல்கள் வெளியாகக் காத்திருக்கின்றன.

அதேபோன்று ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியல்களில் இன்னும் சில தொகுதிகளும் உள்ளன. பொறுத்தமான சந்தர்ப்பத்தில் அவற்றையும் வெளிப்படுத்துவோம்.

இவை தவிர பிறிதொரு முக்கிய பட்டியலும் தயாராகிக் கொண்டிருக்கிறது. அது இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட பட்டியல்களைப் போன்றதல்ல. மிக முக்கியத்துவம் வாய்ந்ததும் பொறுப்புக்கூற வேண்டியதுமாகும்.

அதில் அரசியல்வாதிகள் தவிர்ந்த மேலும் பல முக்கிய புள்ளிகளும் காணப்படுகின்றனர் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!