Monday, March 17, 2025
Huisதாயகம்யாழிலும் இலங்கை தமிழரசு கட்சி பிளவு; உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்..!

யாழிலும் இலங்கை தமிழரசு கட்சி பிளவு; உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்..!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சி.காண்டீபன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது யாழ்ப்பாணத்திலும் முன்னாள் தவிசாளர் ஒருவர் தமிழரசு கட்சியிலிருந்து பிரிந்து மாற்று கட்சியில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதன்படி காரைநகர் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் தலைமையிலான அணி இம்முறை தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமான மான் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பாலச்சந்திரன் தெரிவிக்கையில்,

இதுவரை காலமும் தமக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் காரைநகரின் அபிவிருத்திக்காக தம்முடன் கை கோர்ப்பார்கள் என தான் பலமாக நம்புவதாக குறிப்பிட்டார்.

பிரதேசசபையின் இறுதி 7 மாதங்கள் தான் தவிசாளராக இருந்து பல அதிரடி அபிவிருத்திகளை இனங் கண்டு செயற்படுத்தியமையை தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள் என தாம் திடமாக நம்புவதாகவும். அவரது கட்சியினரின் சட்டப் புலமையை பயன்படுத்தி எதிர்கால காரைநகரின் நிலையான அபிவிருத்திக்கு முறையான திட்டங்களை வகுத்து செயற்படுத்த எண்ணியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!