தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் தேர்தலுக்கு பின்னரான செயற்பாடுகள் தொடர்பில் இன்றைய தினம் (11.05.2025) சட்டத்தரணி மணிவண்ணன் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.
குறித்த சந்திப்பானது வவுனியாவில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் பிரதேச சபைக்கு உறுப்பினரை நியமிப்பது தொடர்பிலும், தவிசாளர் தேர்வின் போது யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலும், கட்சியை வவுனியா மாவட்டத்தில் விரிவாக்கம் செய்வது தொடர்பிலும், மாகாண சபை தேர்தல் தொடர்பிலும், மக்களுக்கான வேலைத் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.




Recent Comments