சீட்டுப் பிடித்து மோசடி செய்த வவுனியாவைச் சொந்த இடமாகக் கொணட 41 வயதான இரத்தினம் சுஜிவன் எனும் குடும்பஸ்தர் மீது வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட 4 பேர் பொலிசால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பிரான்ஸ் பாரிஸ் வல்மொன்டைஸ் பகுதியில் இச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்துள்ளதாக தெரியவருகின்றது. தாக்குதல் மேற்கொண்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என கைதானவர்களின் நண்பர்கள் ரெிவித்துள்ளார்கள்.
பிரான்சில் சீட்டுப் பிடிப்பது சட்டவிரோதமான செயலாகும். இருப்பினும் அங்கு வாழும் தமிழர்கள் பலர் பணம் சேமிக்கும் ஒரு நடவடிக்கையாக பலருடன் சேர்ந்து சீட்டுப்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
இவ்வாறான ஒரு சீட்டுப்பிடிப்பின் போதே சுஜீவன் என்பவன் சுமார் 90 ஆயிரம் யூரோக்களை தன்னுடன் சீட்டுப்பிடித்தவர்களிடமிருந்து ஏமாற்றியுள்ளான்.
ஏமாற்றியதுடன் அப்பகுதியிலிருந்து தலைமறைவாகி வேறு ஓர் இடத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்ததாகத் தெரிய வருகின்றது.
பணம் கொடுத்தவர்கள் சுஜீவன் மறைந்து வாழும் இடத்தை மோப்பம் பிடித்து அங்கு நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரிய வருகின்றது. இத் தாக்குதலில் படுகாயமடைந்த சுஜீவன் தற்போது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
Recent Comments