பாடசாலை மாணவிகளின் படங்கள் மற்றும் காணொளிகளை உருவாக்க செயற்கை நுண்ணறிவு (AI) ஐப் பயன்படுத்திய இரண்டு ஆண் மாணவர்களை ஜூன் 13 வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பெண் மாணவிகளின் முகங்களைப் பயன்படுத்தி AI மூலம் காணொளிகள் மற்றும் படங்களை உருவாக்கி பாடசாலை வாட்ஸ் அப் குழுக்களில் பரப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற தயாராகும் நான்கு பேராவர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, ஹொரணை நீதவான் சந்தன கலன்சூரியா இருவரையும் சிறைச்சாலையின் கீழ் உள்ள சிறார் புனர்வாழ்வு மையத்தில் வைக்க உத்தரவிட்டார்.
ஒரு மாணவியின் தந்தை இந்த படத்தைப் பார்த்து காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து, இரண்டு மாணவர்களும் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


Recent Comments