பௌத்தர்களின் விசேட தினமான பொசன் தினத்தை முன்னிடடு இன்று வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையம், வனவளத் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், இராணுவத்தின் 56 ஆவது படைப் பிரிவு, தொலைத் தொடர்பு திணைக்களம் உள்ளிட்ட 22 இடங்களில் தன்சல்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இதன்போது குளிர்பானம், ஐஸ்கிறீம், கடலை, சீனிசம்பல் பாண் , பிரியாணி, என பல்வேறு உணவுப் பண்டங்கள் தன்சல்கள் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன.

விசேட நிகழ்வாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் சமுதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் 3000 பேருக்கு பிரியாணி வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில மதத்தலைவர்கள், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜயமுனி சோமரட்ண, வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக் கொடி, பொலிஸ் அதிகாரிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமுதாய பொலிஸ் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை பெருமளவான மக்கள் தன்சல்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவை பெற்றதையும் அவதானிக்க முடிந்தது.


Recent Comments