ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாட்டிலிருந்து புறப்பட்டார்.
ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, வர்த்தகம், இலத்திரனியல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட துறைகளில், ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் உள்ளிட்ட இரு தரப்பு ஆர்வமுள்ள பல விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளன.
இதன் போது ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத்துறைசார் தொழிற் சங்கங்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.


Recent Comments