Monday, October 27, 2025
Huisதாயகம்பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதியுங்கள்..!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதியுங்கள்..!

பயங்கரவாதத் தடை சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.

தமது விஜயத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக கொழும்பில் இன்று மாலை ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் கைதிகள் குறித்து விரைவாக மதிப்பாய்வு செய்து அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தன்பாலின உறவுகளை குற்றம் அற்றதாக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் உள்ளதென்பது அறிய கிடைத்துள்ளது. அது விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டில் காவல்துறையில் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைகள் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியான ஈடுபாட்டை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!