ஏற்கனவே திருமணமான ஒரு பெண், ஏற்கனவே திருமணமான ஒரு ஆண் வவுனியா சமயபுரம் என்னும் இடத்தில் கடந்த ஒரு வருடமாக கணவன் மனைவி போல வாழ்ந்து வந்த நிலையில். திடீரென நேற்றைய தினம் கணவர், மனைவியையும் மாமியாரையும் கத்தியால் குத்தி விட்டு தானும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தற்கொலையை பொலிசார் நம்பவில்லையாம் எனத் தெரிய வருகின்றது.
வவுனியா, சமயபுரம் பகுதியில் மாலை 7.30 மணியளவில் இடம்பெற்ற ஒரு துயரச் சம்பவத்தில், குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியையும் அவரது தாயாரையும் கத்தியால் குத்திக் காயப்படுத்திய பின்னர், வீட்டைத் தீ வைத்துக் கொளுத்திவிட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
சமயபுரத்தில் உள்ள வீட்டிற்கு இன்று இரவு வந்த கிருஷ்ணகுமார் (வயது 45) என்பவர், வீட்டில் இருந்த தனது மனைவி வசந்தி (வயது 30) மற்றும் அவரது தாயார் இந்திரா (வயது 69) ஆகியோரை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் அவர் வீட்டிற்கும் தீ வைத்துள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு பெண்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றச் செயலைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் கிருஷ்ணகுமார், பின்னர் அதே வீட்டின் கிணற்றில் விழுந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த கிருஷ்ணகுமாரும், காயமடைந்த வசந்தியும் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், கடந்த ஒரு வருடமாக சமயபுரம் பகுதியில் கணவன் மனைவியாக வசித்து வந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவர்கள் இருவரும் ஏற்கனவே வெவ்வேறு திருமணங்களை முடித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு living together வாழ்கையினை திருமணம் செய்யாது வடக்கில் பலரும் வாழ்ந்து வருகின்றனர். இதுவும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பும் வகையிலான முறை தவறிய விபச்சாரம் தான். இத்தகைய சிலர் சட்ட விரோத செயல்கள், போதைப் பொருள் வர்த்தகம், அச்சுறுத்தி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
எமது தமிழ் சமுதாயம் எங்கே செல்கிறது என்பது மிகவும் அதிர்ச்சியாகத் தான் உள்ளது.
Recent Comments