இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக கூட்டு அஞ்சல் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் மேலதிக நேரப் பிரச்சினை தொடர்பிலேயே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அஞ்சல் தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது.
2016 முதல் அஞ்சல் சேவையில் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்ளத் தவறியதன் காரணமாகவே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நீண்ட காலமாக நிலவும் ஆட்சேர்ப்பு பிரச்சினைகளை மேலும் தாமதமின்றி தீர்க்குமாறு தொழிற்சங்கம் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.


Recent Comments