யாழ் திருநெல்வேலிப் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இளம் குடும்பப் பெண் ஒருவருடன் அறை ஒன்றினுள் தங்கியிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அரை குறை ஆடையுடன் ஓடித்தப்பினார். கடந்த ஞாயிறு பகல் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.
யாழ் கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒரு பிள்ளையின் தாயாரான இளம் குடும்பப் பெண்ணின் கணவன் அண்மையில் கனடா சென்றுள்ளார்.
இந் நிலையில் கணவனின் பெற்றோருடன் குறித்த பெண் தனது குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
பெண்ணின் கணவனின் தம்பி மானிப்பாய் பகுதியில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த நிலையில் தனது பெற்றோரைப் பார்க்க வரும் சந்தர்ப்பங்களில் தனது அண்ணனின் மனைவியான அண்ணியுடன் சண்டை ஏற்பட்டு அது பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது.
இந்த சம்பவத்திற்காக குறித்த குடும்பப் பெண் சில தடவைகள் பொலிஸ் நிலையம் சென்று வந்துள்ளார். அந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த சிறுகுற்றத் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிய வருகின்றது.
இதன் காரணமாக விசாரணை என்ற பெயரில் சில தடவைகள் கணவனின் பெற்றோரின் வீட்டுக்கு குறித்த பொலிஸ் அதிகாரி வந்து சென்றதுடன் கணவனின் தம்பியாரையும் பெற்றோரைப் பார்க்க அங்கு வரக்கூடாது என எச்சரிக்கை செய்து ஒரு நாள் பொலிஸ் சிறைக் கூடத்தினுள்ளும் அடைத்து வைத்திருந்துள்ளார்.
இதன் பின்னர் தம்பியார் தனது நண்பர்களுடன் சேர்ந்து புலனாய்வில் இறங்கி பொலிஸ் அதிகாரிக்கும் அண்ணிக்குமான கள்ளத் தொடர்பை கண்டு பிடித்தாகத் தெரிய வருகின்றது.
இது தொடர்பாக பல தடவைகள் கனடாவில் உள்ள அண்ணனுக்கு தெரியப்படுத்தியும் அண்ணன் அதை நம்பாது தனது மனைவியிடம் கூறியதால் குறித்த பொலிஸ் அதிகாரி மீண்டும் தம்பியை பொலிஸ் நிலையம் அழைத்து சிறைக்குள் தள்ளுவேன் என எச்சரித்ததாகவும் தெரிய வருகின்றது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை திருநெல்வேலிப் பகுதியில் நாள் வாடகைக்கு விடும் வீடு ஒன்றில் பொலிஸ் அதிகாரியும் அண்ணியும் தங்கியிருந்த போது உள்ளே கைத் தொலைபேசிகள் மூலம் வீடியோ எடுத்தபடி நுழைந்த தம்பி மற்றும் அவனது நண்பர்களால் இருவரும் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீடியோ கணடாவில் உள்ள அண்ணனுக்கும் அனுப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
Recent Comments